Published : 10,Feb 2021 12:44 PM
உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களின் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/BylLMwZSRl
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 10, 2021