[X] Close

சட்டப்பேரவைக்கு வர கருணாநிதிக்கு விலக்கு

excemption-for-dmk-leader-karunanidhi-to-come-to-assembly

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்கு அளிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் பேரவைக்கு வர விலக்கு அளிக்குமாறு அதில் கோரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வழிமொழிந்தார். அந்த தீர்மானம் மீது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதனையடுத்து கருணாநிதி சட்டப்பேரவைக்கு வருவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. நடப்புக் கூட்டத்தொடரில் மட்டும் கருணாநிதி பேரவைக்கு வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close