[X] Close

பாலிவுட்டில் நிறப்பாகுபாடு? - நவாஸுதீன் சித்திக்கின் அப்செட் ட்வீட்

nawazzuddin-siddqui-tweet

இந்தி சினிமாவில் மிகத்திறமையான நடிகராக அறியப்படும் நவாஸுதீன் சித்திக், பாலிவுட்டில் நிறப் பாகுபாடு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதத்தில் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

நவாஸுதீன் சித்திக் தனது ட்விட்டரில், ''அழகானவர்களுடனும் நிறத்தில் பளிச்சென்று இருப்பவர்களுடனும் நான் ஜோடி சேர முடியாது என்று எனக்கு உணர்த்தியதற்கு நன்றி. ஏனெனில் நான் கருப்பு, பார்க்க அழகாக இல்லாதவன். ஆனால் நான் எப்போதும் இதில் கவனம் செலுத்துவதில்லை'' என்று ட்வீட் செய்துள்ளார். ஆனால், இத்தகைய மனவருத்தத்துடன் ட்வீட் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பதை அவர் விவரிக்கவில்லை. 

கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில் நல்ல தோற்றத்தை விட திறமைக்கு திரையுலகம் மதிப்பளிப்பதாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close