[X] Close

"விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள்" பிரியங்கா சோப்ராவிடம் கேட்கும் மியா கலீஃபா

இந்தியா,உலகம்

Farmers--Protest--Mia-Khalifa-Asks-Priyanka-To-Raise-Her-Voice

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டம் குறித்து மவுனம் கலைக்கவேண்டும் என்று நடிகை மியா கலீஃபா தெரிவித்தார்.


Advertisement

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகை மியா கலீஃபா, இந்த விஷயத்தில் பிரியங்கா சோப்ராவின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். "பிரியங்கா சோப்ரா எந்த நேரத்தில் பேசப் போகிறார்? எனக்கு ஆர்வமாக இருக்கிறது. பெய்ரூட் பேரழிவு அதிர்வுகளின் போது இருந்த ஷகிராவின் மவுனம் போல இது உள்ளது " என்று கலீஃபா ட்வீட் செய்துள்ளார்.

image


Advertisement

மியா கலீஃபா, பாப் நட்சத்திரம் ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், நடிகை சூசன் மற்றும் வழக்கறிஞர் மீனா ஹாரிஸ் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏற்கனவே ட்வீட் செய்தனர். பிரியங்கா சோப்ரா தற்போது விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக "எங்கள் விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று எழுதினார்.


Advertisement

Advertisement
[X] Close