[X] Close

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது தாக்குதல்: 3 பேர் கைது

Cricketer-Mohammed-Shami-attacked-outside-home

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கட்ஜூ நகரில் வசித்துவருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு, வெளியில் சென்றுவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.  அவர் மனைவியும் உடனிருந்தார். டிரைவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஷமியின் வீட்டருகே வந்த பைக்கில் கார் மோதிவிட்டது. இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. முகமது ஷமி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அவர்கள் தங்கள் நண்பர்களை அழைத்தனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அவர்கள் ஷமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள், ஜெயந்த சர்கார், ஸ்வரூப் சர்கார், ஷிவா ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close