தமிழகம் திரும்பும் சசிகலா: அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

தமிழகம் திரும்பும் சசிகலா: அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
தமிழகம் திரும்பும் சசிகலா: அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

‌அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 3 இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அதிமுக அலுவலகத்தில் 5 காவலர்கள் வரை மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பர்.

நாளை சசிகலா தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அதிமுக கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 25-க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

<iframe width="683" height="384" src="https://www.youtube.com/embed/3uJ9-Y1rmnI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com