சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து நேற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் நேற்றைய தினமே சதமடித்துவிட்டார். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் விரைவாக 82 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 200 ரன்களை கடந்தார். 100-ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 218 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு வந்த போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 34, 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் டக் அவுட்டானார். இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க திணறினாலும் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 600 ரன்களுக்கு டிக்ளெர் செய்யுமா அல்லது ஆல் அவுட் ஆகுமா என்பதுதான் நாளைக்கான எதிர்பார்ப்பு.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?