லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் அருகே இந்திய வீரர்களுக்குக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் நவ்காம் செக்டார் பகுதியில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com