
சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம் அருகே சசிகலா கொடியேற்ற தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள்கள் கீதா, ராதா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை வைத்தனர். அமமுக சார்பில் சசிகலா கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சசிகலா கொடியேற்றுவதற்காக கம்பம் நட, பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் முறையிட்டுள்ளனர்.
இவர்களின் முறையீட்டை தொடர்ந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.