[X] Close

ஒடிசா: சரக்கு ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழப்பு

இந்தியா

Odisha--Two-Elephants-Die-After-Being-Hit-by-Goods-Train

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில், சரக்கு ரயில் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்தன.

ஒடிசா மாநில சுந்தர்கர் மாவட்டத்தில் ரூர்கேலா வனப்பிரிவு பகுதியில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு யானைகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை இரவு பிஸ்ரா பிராந்தியத்தில் மஹிபானி அருகே ஹவுரா-மும்பை ரயில் வழித்தடத்தினை யானைகள் கடக்கும்போது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹதிபரி மற்றும் மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பூரி-சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு யானைகள் இறந்தன. "விபத்து நடந்தபோது சரக்கு ரயில் நாசிக் நகரிலிருந்து ஷாலிமார் நோக்கி சென்று கொண்டிருந்தது. யானைகள் விபத்துக்கு பின்னர் ரயில்தட மறுசீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன" என்று பங்கமுண்டா உதவி நிலைய மாஸ்டர் நிஷாந்த் குமார் தெரிவித்தார்.


Advertisement

image

இந்த சம்பவத்தால் மாநில வனத்துறைக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளது . ரூர்கேலா பிரிவின் வன உதவி பாதுகாவலர் தங்கதர் பெஹெரா கூறுகையில், "யானை மண்டலம் வழியாக, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சென்ற அந்த ரயிலை நிறுத்த எங்கள் அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டனர். யானைகள் அங்கே இருப்பதை ஓட்டுநருக்கு தெரிவிக்க முயற்சித்தோம்." என்று தெரிவித்தார்


Advertisement

Advertisement
[X] Close