Published : 17,Jul 2017 03:45 PM
தமிழகத்தில் குறைவான வெப்பநிலை; பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேவாலா, வால்பாறை, சின்னகல்லார் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று தமிழகத்தில் எங்குமே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டவில்லை.