இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் வாக்களித்தனர். வாக்குரிமை உள்ளவர்களில் 99 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாக்கை செலுத்தினார். அவருடன் வந்த பாஜக தலைவரான அமித்ஷாவும் தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பலரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கை பதிவு செய்தனர். மத்திய இணையமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான பொன் ராதாகிருஷ்ணன் வாக்கு செலுத்தினார். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வரவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், மொத்தம் 232 எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் வாக்களித்தனர்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 எம்எல்ஏக்களும் வாக்களித்ததையடுத்து இரண்டரை மணிநேரத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்தது. விஜய் சவுக் பகுதியில் வீரர்கள் குதிரையில் அணிவகுத்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்