133 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்: தொடரை சமன்செய்த தென்னாப்பிரிக்கா

133 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்: தொடரை சமன்செய்த தென்னாப்பிரிக்கா
133 ரன்களில் இங்கிலாந்து ஆல்அவுட்: தொடரை சமன்செய்த தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 474 ரன்களை தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 340 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இங்கிலாந்து அணியின் 7 வீரர்களால் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்ட முடியவில்லை. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் பிலாண்டர் மற்றும் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்களும், இங்கிலாந்து அணி 205 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com