[X] Close

மியான்மர் வைரல்: ஆட்சி கவிழ்ப்பு நாளில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் பதிந்த வீடியோ!

உலகம்,வைரல் வீடியோ

Aerobics-Instructor-Dances-As-Myanmar-Coup-Unfolds-Behind-Her

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நாளில், ராணுவ வாகனங்கள் தனக்குப்பின்னே அணி வகுப்பதை அறியாமல் பயிற்சியாளர் ஒருவர் பதிவு செய்த ஏரோபிக்ஸ் காணொலி காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

கடந்த திங்களன்று மியான்மரின் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்த ராணுவம் ஆட்சியையும் கைப்பற்றியது. அதேநாளில் தலைநகர் நேபிதாவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையில் உள்ள முக்கிய சந்திப்பில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் கிங் ஹெனின், தனது வழக்கமான பயிற்சியை மேற்கொள்ளும்போது அவரது பின்னால் ராணுவ வாகனங்கள் அணிவகுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு போட்டிக்காக தான் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், அது மறக்க முடியா ஒன்றாக அமைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து பலரும் ஐயம் எழுப்பிய நிலையில் இது உண்மையானதுதான் என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close