தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் "ஜகமே தந்திரம்" முதலில் ரிலீஸாகப்போவது தியேட்டரிலா அல்லது ஒடிடியிலா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என செய்தி வெளியாக இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர், மனம் மாறி, படத்தை ஓடிடி தளத்துக்கு விற்றதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
தமிழக அரசும் அண்மையில் தியேட்டர்களில் 100 சதவித இருக்கைக்கு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரத்தை ஒடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த சூழ்நிலையில் இதில் திடீர் திருப்புமுனையாக நடிகர் தனுஷே இத்திரைப்படத்தை வாங்கி தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தனுஷின் வுண்டர் பார் நிறுவனத்தை இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடும் என தெரிகிறது.
மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் சமீபத்தில் வெளியான சிபிராஜ் நடித்த கபடதாறி படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், அடுத்ததாக வெளியாக உள்ள படங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கையில்தான் தன்னுடைய படத்தையும் எப்படியும் திரையரங்கில் வெளியிட்டுள்ளால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் நினைப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர்களை பொறுத்தவரை தியேட்டரில் வெளியிட்டால்தான் அது அவர்களுடைய ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும். அப்படியான ரசிகர்கள் கணக்கைதான் தனுஷ் இப்போது போட்டு வருகிறது. ஏற்கனவே அவர் நடித்த கர்ணன் திரைப்படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!