கிருஷ்ணகிரி: மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியை புதுவிதமாக திருடிச் செல்லும் கும்பல்

கிருஷ்ணகிரி: மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியை புதுவிதமாக திருடிச் செல்லும் கும்பல்
கிருஷ்ணகிரி: மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியை புதுவிதமாக திருடிச் செல்லும் கும்பல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதுவித திருட்டை, திருடர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமல்படுத்தி வருகிறார்கள்.


போச்சம்பள்ளி அடுத்துள்ள பாளேதோட்டம் கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த 25 KVA மின்மாற்றியை நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து கழற்றி அதிலிருந்த சுமார் ரூ.36,000 மதிப்புள்ள செம்பு கம்பிகள், டிரான்ஸ்பாரம் ஆயில் ஆகியவற்றை திருடிவிட்டு மீதமுள்ள பாகங்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.


இதேபோல் அங்கம்பட்டி மற்றும் பாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள மின்மாற்றியை உடைத்தும் திருடியுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் கிருஷ்ணகிரி மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளி கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்து மின்மாற்றியிலுள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com