[X] Close

சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு அனுமதி!

விளையாட்டு

BCCI-allows-50-percent-audience-in-Chepauk-Cricket-Stadium

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Advertisement

image

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.


Advertisement

image

முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியை காண 50 சதவித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close