
சையத் முஷ்டக் அலி கோப்பையை வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினர்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 120 ரன்களை குவித்தது அந்த அணி. அந்த அணிக்காக விஷ்ணு சொலங்கி 49 ரன்களை எடுத்திருந்தார்.120 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டியது தமிழக அணி. 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது தமிழ்நாடு.
இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக வீரர்கள், தங்களது ஓய்வறையில் விஜய் நடித்து அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.