[X] Close

மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கான அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு,மத்திய பட்ஜெட் 2021

Budget-2021-2022-What-are-the-projects-allocated-for-Tamil-Nadu

2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்களில் அவர் முடித்தார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:


Advertisement

1. பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடிதுறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.

2. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது . சென்னை மெட்ரோ ரயிலின் இந்தத் திட்டம் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.


Advertisement

3. தமிழகத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியில் 3,500 கி.மீ சாலைப்பணிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

கன்னியாக்குமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும். 8,500 கி.மீட்டருக்கு புதிய சாலைகளை உருவாக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Advertisement

நாடு முழுவதும் மேலும் 11,500 கி.மீ தூரத்திற்கு சாலைப்பணிகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close