மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது
மியான்மர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராணுவத்தின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபர் வின் மைன்ட், ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் ராணுவம் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!