Published : 31,Jan 2021 02:26 PM
ஓடிடி தளங்களுக்கு வருகிறது கடிவாளம் - மத்திய அரசு அறிவிப்பு

ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ''ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.