நடிகை ரித்திகா சிங்கின் சமீபத்திய போட்டோ ஷூட் கவனம் ஈர்த்துள்ளது.
அழகழகான வித்யாசமான போட்டோஷூட்கள்தான் நடிகைகளின் பட வாய்ப்புக்கான என்ட்ரி கார்டு. முன்னணி நடிகையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை கேமராவில் சுட்டுத்தள்ளி சமூக வலைதளங்களில் வைரலாக்க விடுவார்கள். ஆனால், பெரும்பாலான நடிகைகளிலிருந்து மிகவும் மாறுபட்டவர் நடிகை ரித்திகா சிங்.
இவரின் போட்டோ ஷூபடங்களை பார்ப்பது அரிதுதான். தனது சமூக வலைதளப் பக்கங்களில் டி ஷர்ட், ஜீன்ஸ், சாதாரண உடைகள் போன்றவற்றில் கேஷுவலாக எடுக்கும் புகைப்படங்களையே பதிவிட்டு வருவார். போட்டோ ஷூட் என்று பெரும்பாலும் தனியாக எடுத்து வெளியிடுவதில்லை.
ஆனால், தற்போது ரித்திகா சிங்கும் போட்டோ ஷூட்டில் இறங்கி பார்ப்போரை அழகான புகைப்படங்களால் கிறங்கடிக்கிறார். அப்படித்தான், இன்று மாலை அவர் beige கலர் புடவையில் பிரகாசிக்கிறார். அவரது உடல் நிறத்திலெயே புடவையும் அணிந்திருக்கும் ரித்திகா சிங்கின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் ‘வாவ் மை ரித்திகா’ சிங் என்று பாராட்டித்தள்ளி கருத்திட்டு வருகிறார்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மாதவன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரித்திகா சிங். நிஜ பாக்ஸிங் வீராங்கனை என்பதால் அவரது நடிப்பு இன்னும் கவனம் ஈர்த்த்து. இப்படத்திற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என பல்வேறு விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு ரித்திகா சிங் நடிப்பில் பிப்ரவரி வெளியான ‘ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட் அடித்து பாராட்டுக்களை குவித்தது.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்