Published : 29,Jan 2021 03:32 PM

"ரஹானே தலைமையின் கீழ் இந்தியா இன்னும் சிறப்பாக விளையாடும்" - ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் லீ!

Indian-team-would-function-a-lot-better-if-Ajinkya-Rahane-was-Test-captain-says-Shane-Lee

ரஹானே தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் லீ தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது. அந்தத் தொடரின் முதல் டெஸ்ட்டில் மட்டுமே கோலி கேப்டனாக செயல்பட்டார். அதற்கடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக இருந்தார். ரஹானே தலைமையிலான அணி 2 டெஸ்ட் போட்டிகளை வென்று, 1 போட்டியை சமன் செய்து அசத்தியது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் கோலி கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

image

இது குறித்து "ஸ்போர்ட் போட்கேஸ்ட்" நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் லீ பேசியுள்ளார். "ரஹானே தலைமயிலான இந்திய அணி மிகவும் அமைதியாக இருக்கிறது. நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் ரஹானேவை கேப்டனாக்கி இருப்பேன். கோலிக்கு எந்தச் சுமையும் கொடுக்காமல் பேட்டிங்கில் கலக்குக்கங்கள் என விட்டுவிடுவேன்.அப்படி இருந்தால் இந்திய அணி இன்னும் சிறப்பானதாக இருக்கும். இந்தத் தொடரில் 21 வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியிருக்கிறது இந்தியா" என்றார்.

மேலும் பேசிய அவர் "அப்படி பயன்படுத்தப்பட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றினார்கள். மிக முக்கியமாக கேப்டனுக்கு உறுதுணையாக இருந்தார்கள்" என்றார் ஷேன் லீ.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்