[X] Close

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

தமிழ்நாடு

மத்திய அரசு செவிலியருக்கு இணையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். 


Advertisement

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்; மத்திய அரசு செவிலியருக்கு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும்; கொரோனாவால் உயிர் நீத்த செவிலியர்கள் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும்; 6,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பணிக்கு வந்தனர். 


Advertisement

Advertisement
[X] Close