மாநில அரசுகளின் இலவச திட்டங்கள் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தொடர்புடைய மாநிலங்கள் தனி ஆதார் சட்டத்தை இயற்ற வேண்டும் என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல மாநிலங்கள் பல்வேறு இலவச பொருட்களையும், சேவைகளையும் தங்களது மக்களுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் அவை தகுதியான பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய வழிமுறை எதும் இல்லை. இதனால் மாநில அரசுகளின் பணம் வீணாவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் ஆதார் திட்டத்தின் கீழ் இவற்றை கண்காணிக்க வாய்ப்பில்லை. எனவே இலவச திட்டங்களுக்கும் ஆதாரை கட்டாயமாக்கும் வகையில் மாநிலங்கள் தனிச்சட்டம் இயற்றுவது நல்லது என நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!