[X] Close

பட்ஜெட் 2021: அடுக்கடுக்கான நெருக்கடிகள்... நிர்மலா சீதாராமன் சந்திக்கும் சவால்கள்!

வணிகம்,மத்திய பட்ஜெட் 2021

Budget-2021--The-biggest-challenges-facing-Nirmala-Sitharaman

கடுமையான பொருளாதார வீழ்ச்சி, சரிந்த வேலைவாய்ப்புகள், குறைந்து போன வருவாய், அதிகரித்துக்கொண்டே இருக்கும் செலவுகள்... இப்படி அடுக்கடுக்கான சவால்களுடன் மத்திய பட்ஜெட்டை எதிர்கொள்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


Advertisement

நாட்டின் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவுக்கு கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சரிந்தது. கொரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு பின் இது மெள்ள மீண்டாலும் இதை வரும் ஆண்டில் கணிசமாக உயர்த்துவது இமாலய சவாலாக இருக்கும். மறுமுனையில் கொரோனா காலத்தில் குறைந்த வேலைவாய்ப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் நெருக்கடியும் அரசுக்கு உள்ளது.

கொரோனா காலத்திற்கு முந்தைய வேலைவாய்ப்பு இன்னும் எட்டப்படவில்லை என்பதை தேசிய புள்ளியியல் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தொழில் மற்றும் வணிகத் துறையினருக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதிலிருந்து தனி நபர்களுக்கான வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது வரை நாடெங்கும் இருந்து அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.


Advertisement

இவை தவிர பொருளாதார வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்க அதிகளவில் சலுகைகளை அறிவிக்க வேண்டிய அவசியமும் அரசுக்கு எழுந்துள்ளது.

image

Consumer Demand எனப்படும் நுகர்வோர் தரப்பு தேவைகளை பெருக்க வேண்டிய நிர்பந்தமும் அரசுக்கு உள்ளது. இந்த அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காண பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு தேவைப்படும். ஆனால், அரசின் வருவாய் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதே யதார்த்த நிலை.


Advertisement

வருவாய் உயராத அதே நேரத்தில் செலவுகள் பன்மடங்கு அதிகரி்த்து காணப்படுகின்றன. விவசாயிகளுக்கு தரப்பட வேண்டிய உர மானியம் வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிடும் நிலை உள்ளது. இது தவிர கொரோனா தடுப்பூசிக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

இப்படி பல முனை சிக்கல்களை தாண்டி சாமானியனின் பொருளாதாரமும் பாதிக்காமல் அரசின் பொருளாதாரமும் பாதிக்காமல் வரவு, செலவுகளை எப்படி வெற்றிகரமாக நிர்வகிக்க போகிறார் நிர்மலா சீதாராமன் என்பது நிச்சயம் மில்லியன் டாலர் கேள்வி.


Advertisement

Advertisement
[X] Close