சேலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொலை கைதி எடுத்த விபரீத முடிவு

சேலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொலை கைதி எடுத்த விபரீத முடிவு
சேலம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொலை கைதி எடுத்த விபரீத முடிவு

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முத்துவேல் என்ற கைதி, இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். கூலித் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி சொத்துக்காக தனது தாய் மற்றும் சித்தியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


இந்தநிலையில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மத்திய சிறையின் சுவற்றின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கழிவறைக்கு சென்ற முத்துவேல் ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் கைதி முத்துவேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com