
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு உதவி செய்ய இரண்டு பெண் கைதிகள் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு தனி சமையலறை, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு மேரி, ரேகா என்ற 2 தமிழ்ப் பெண் கைதிகள் உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தும்கூர் சிறையில் இருந்து சசிகலாவுக்காகவே பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக குற்றம்சாட்டிய டி.ஐ.ஜி. ரூபா, நேற்று முன்தினம் சிறைக்கு சென்றபோது அவருக்கு எதிராக மேரியும் ரேகாவும் கோஷங்கள் எழுப்பினார்களாம்.