[X] Close

கடலூர்: குளத்தில் விழுந்த தோழியை காப்பாற்ற சென்ற மேலும் 2 சிறுமிகள் உயிரிழப்பு

தமிழ்நாடு

Three-girls-drowned-into-Pond-and-dead

குளத்தில் விழுந்த தோழியை காப்பாற்ற சென்ற மேலும் 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


Advertisement

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் கன்னி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கிராம மக்கள் கோயிலிலிருந்து அங்கு உள்ள குளக்கரைக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது குளத்திற்கு வந்த 5 சிறுமிகள் குளம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி குளத்தில் கால் கழுவ சென்றுள்ளார். அப்போது அவர் வழுக்கி குளத்தில் விழ அவரை காப்பாற்ற சென்ற மேலும் இரண்டு சிறுமிகள் குளத்தில் மூழ்கியுள்ளனர்

குளத்தில் மூழ்கிய புவனேஸ்வரி (19), நந்தினி( 17), வினோதினி (16) ஆகிய மூவரை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். அவர்களது உடல் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அக்கிராமத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.


Advertisement

புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அதிக ஆழம் இருப்பது தெரியாமல் குளத்தில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


Advertisement

Advertisement
[X] Close