[X] Close

தோல்வியை தாங்க முடியலையே: சரத்குமார் வேதனை

Sarathkumar-at-Mumbai

மகாராஷ்டிர மாநில சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், பெருந்தலைவர் காமராஜர், சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகியவை மும்பையில் நேற்று நடந்தது. 
விழாவில் கட்சி தலைவர் சரத்குமார் பேசும்போது, ‘சறுக்கல்கள் இல்லாமல் வாழ்வில் வெற்றி பெற முடியாது. இன்று பல இளைஞர்கள், சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்கிறார்கள். அப்படி பார்த்தால் நானெல்லாம் ஆயிரம் முறை தற்கொலை செய்து இருக்க வேண்டும். தோல்வியடையாமல் யாரும் வெற்றி பெற்றிருக்க முடியாது. இன்று தமிழகத்தில் பலர், நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் தகுதி இருக்கிறதா?. நமக்கு ஆட்சி புரியும் தகுதி வரும். ரஜினி, கமல் பற்றி பேசினால் சர்ச்சையாகிவிடுகிறது. நாட்டு, நலன், தமிழர் நலன் பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை’ என்று வருத்தத்துடன் கூறினார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close