Published : 17,Jul 2017 02:23 AM

'ஜெயலலிதா இருந்த போது பேச முடிந்ததா?' : கமலுக்கு தமிழிசை கேள்வி

Tamilisai-asks-kamalhasan-did-he-speaks-about-goverment-during-the-presence-of-jayalalitha

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, கமல்ஹாசன் அவர்களுக்கு அதிமுக அரசின் மீது குறைசொல்ல தைரியம் இருந்ததா என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், கமல்ஹாசன் திரைப்படத்துறையில் கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அதிமுக அரசின் மீது குறைசொல்ல கமல்ஹாசன் அவர்களுக்கு தைரியம் இருந்ததா என்று கேள்வி எழுப்பினார். மேலும் கமல்ஹாசன் மிரட்டப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள அவர், திமுக ஜனநாயகத்துடன் திரைத்துறையினரை நடத்தினார்களா என்றும், இதுகுறித்து ஜெயலலிதாவிடம் திரைத்துறையினர் முறையிட்டதும் தனக்கு நினைவிருப்பதாகவும் கூறியுள்ளார். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்றதில் தலையிடுகிறார் என்றும் தமிழிசை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்