[X] Close

மூதாட்டி கண்ணில் சிக்கியிருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்

27-contact-lenes-strucked-in-old-ladies-eye-been-operated-by-indian-doctor

லண்டனில் பெண் ஒருவரின் கண்களில் இருந்து 27 கான்டாக்ட் லென்ஸ்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.


Advertisement

பிர்மின்ஹாம் நகரில் இந்தியா வம்சாவளி டாக்டர் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார். 67 வயதான பெண்மணி, 35 வருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வருகிறார். கண் பாதிப்புக்காக ஒரு முறை மட்டுமே அந்த பெண்மணி மருத்துவரை அணுகியுள்ளார். பின்னர் 35 வருடங்களாக மருத்துவர்களின் ஆலோசனை இன்றி அவராகவே கான்டாக்ட் லென்ஸ் வாங்கி பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு பயன்படுத்தும்போதுதான், 27 லென்ஸ்கள் கண்களிலேயே சிக்கி தங்கிவிட்டன. இதனால் அவருக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் அந்த பெண்மணி கண்புரை சிகிச்சைக்காக இந்தியா வம்சாவளி டாக்டரை அணுகியுள்ளார். இதற்கான பரிசோதனையின்போதுதான் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.


Advertisement

Advertisement
[X] Close