Published : 25,Jan 2021 03:19 PM
கடலூர்: தேவநாத சுவாமி கோயிலில் ஒரே நேரத்தில் 200 திருமணங்கள்!
கடலூரில் அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் ஒரே நேரத்தில் 200 திருமணங்கள் நடைபெற்றதால் கோயில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் 50 திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் வந்த மேலும் 150 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.