Published : 17,Jul 2017 02:00 AM

அமெரிக்க விமானத்தால் நின்ற நிச்சயதார்த்தம்... விமானத்துக்கு அபராதம்

FINE-IMPOSE-TO-AIRLINES

விமானத்தில் ஏற அனுமதி மறுத்ததால் நிச்சயதார்த்தம் ரத்தான சென்னை பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அமெரிக்க விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரசன்னா என்பவரின் மகள் இந்திரா பிரியாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதற்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வருவதற்காக டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பிரியாவின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பிரியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி டெல்டா விமான நிறுவனத்துக்கும், பயண டிக்கெட்டை பதிவு செய்து கொடுத்த ஆன்லைன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்