
கர்நாடகாவில் 14 மாதங்களாக நடைபெற்று வந்த காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி அரசு கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.
மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை.
கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல். எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை பாரதிய ஜனதா உணரும் என பிரியங்கா கருத்து.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு நடத்திய பின் முதலமைச்சர் பேட்டி.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக உறவினரிடம் விசாரணை. ஆதாயத்துக்காக அரங்கேற்றப்பட்ட கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை பொழிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.