[X] Close

சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்

இந்தியா

Headlines-of-the-day

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க பாகிஸ்தானிலிருந்து ட்விட்டர் மூலம் பரப்பப்படும் வதந்திகள்.308 ட்விட்டர் கணக்குகள் மூலம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த சதி என டெல்லி உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டு.


Advertisement

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகப் போவதாக தகவல்.மாறுபட்ட கருத்துகளை பேசி தீர்க்க முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு.

மசினகுடியில் காட்டு யானை மீது தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் யானைகள் திட்ட ஆய்வாளரின் 3 நாள் கள ஆய்வு தொடக்கம்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விரிவான அறிக்கை தர திட்டம்.


Advertisement

நாடெங்கும் இன்று முதல் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வினியோகம் தொடக்கம்.முதல் கட்டமாக புதிய வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

கோவையில் தேர்தல் பரப்புரைக்கிடையே ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட முதல்வர்.கையில் வேல் பிடித்தாலும் ஸ்டாலினுக்கு இறைவன் வரம் தர மாட்டார் என பேச்சு.

வேலை நாங்கள் கையில் எடுத்தால் சூரசம்ஹாரம் நடந்தே தீரும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி.ஆறுபடை முருகனின் அருள் ஸ்டாலினுக்கு‌‌‌‌‌‌‌ இருக்கும் என ஆர்.எஸ்.பாரதியும் நம்பிக்கை.


Advertisement

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் தொடங்க வேண்டும். அதிமுகவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை.

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்.குடியரசு தின பேரணியில் பங்கேற்க உள்ள என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பிரதமர் பேச்சு.

தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

தடுப்பூசி செலுத்தும் பணியில் அமெரிக்கா, பிரிட்டனை முந்தியது இந்தியா. நாடு முழுவதும் 8 நாளில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.

பறவைக்காய்ச்சல் அச்சம் நீடிக்கும் நிலையில் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் சரிவு. 3 நாட்களில் 45 காசு விலை குறைந்து 3 ரூபாய் 80 பைசாவாக நிர்ணயம்.

கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு.சென்னை அருகே வானகரம் சுங்கச்சாவடி மீது தாக்குதல்.

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக் கோரி நடக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு. தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ரஷ்யா எச்சரிக்கை.

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரதமர் கே.பி.ஒலி நீக்கம்.ஆளும் கட்சியில் கோஷ்டிப் பூசலின் உச்சக்கட்டமாக புதிய திருப்பம்.

Related Tags : indiatamilnaduheadlines

Advertisement

Advertisement
[X] Close