வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ் தெரிவித்தார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல , அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்
மேலும் “மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம். தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள் கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும், கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம். சின்னம்மா சசிகலா அவர்கள் 27ஆம் தேதி விடுதலை ஆக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாது, உண்மையான அதிமுகவினரும் வரவேற்பார்கள், அவரை பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை” எனவும் தெரிவித்தார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்