"என்னால் ரன் அடிக்க முடியாததால்தான் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைத்தது" மனம் திறந்த சாஹா!

"என்னால் ரன் அடிக்க முடியாததால்தான் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைத்தது" மனம் திறந்த சாஹா!
"என்னால் ரன் அடிக்க முடியாததால்தான் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைத்தது" மனம் திறந்த சாஹா!

தன்னால் ரன்களை குவிக்க முடியாத காரணத்தினால்தான் ரிஷப் பன்ட்க்கு வாய்ப்பு கிடைத்தது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா மனம் திறந்து கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா அபாரமாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிட்னி மற்றும் காபா டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடினார். ஆனால் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சாஹாதான் இருந்தார். விக்கெட் கீப்பிங்கை சிறப்பாக செய்தாலும் அவரால் பேட்டிங்கின்போது ரன்களை சேர்க்க முடியவில்லை. அதனால் அதற்கு அடுத்து நடைபெறும் போட்டிகளில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து பேசிய சாஹா "நானும் பன்ட்டும் நட்புடனே எப்போதும் பழகுவோம். நீங்கள் வேண்டுமானால் இதனை அவரிடமே கேட்டுக்கொள்ளலாம். எங்கள் இருவரில் யாருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். இதனால் எங்களுக்குள் ஒரு சங்கடமும் மனக் கசப்பும் ஏற்பட்டதில்லை. இதில் யார் நம்பர் 1, நம்பர் 2 என்பதெல்லாம் இல்லை. அணி எப்போதும் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அப்போது வாய்ப்பு வழங்கும்" என்றார் சாஹா.

மேலும் பேசிய அவர் "நான் என்னுடைய பணியை எப்போதும் போல் செய்துக்கொண்டு இருப்பேன். அணியில் தேர்வாவது என்னுடைய கையில் இல்லை. அது அணியின் நிர்வாகத்தின் கையில் இருக்கிறது. அல்ஜீப்ராவை யாரும் உடனடியாக கற்றுக்கொள்ள முடியாது, படிப்படியாகத்தான் முடியும். அதேபோலதான் ரிஷப் பன்ட் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறார். இப்போது பக்குவமாகிவிட்டார், அதனை நிரூபித்தும்விட்டார்" என்றார் சாஹா.

ரிஷப் பன்ட் அணியில் இடம்பிடித்தது குறித்து கூறிய சாஹா "என்னால் ரன்களை குவிக்க முடியாத காரணத்தால் பன்ட் அணியில் இடம்பிடித்தார். இது ஒரு சாதாரண விஷயம். நான் வழக்கம்போல என்னுடைய திறனை மேம்படுத்த தொடர்ந்த பயிற்சியில் ஈடுபடுவேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com