ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை

ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை

ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஒசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று பட்டபகலில் 6 பேர்கொண்ட கும்பலால் 25 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கு கிடைத்த சிசிடிவி வீடியோக்கள் மற்றும் அவர்களுடைய செல்போன் சிக்னல்களை வைத்து கொள்ளையர்களை போலீஸார் பிந்தொடர்ந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்டமாக, நகைகளைக் கொள்ளையடித்து எடுத்துச்சென்ற பைகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. ஜிபிஎஸ் கருவிகளை வைத்து குற்றவாளிகளை பின்தொடர்ந்து தேடிவந்தனர். கர்நாடக மாநிலம் ஆனைக்கல் என்ற பகுதியில் ஜிபிஎஸ் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டு நேற்று இரவுமுதல் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்தபோது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக்கொண்டு ஹைதராபாத் சென்றது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். 6 பேரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com