[X] Close

கோபால்கிருஷ்ண காந்தி 18-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல்

VP-Polls--Gopal-Krishna-Gandhi-to-File-Nomination-on-July-18

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபால்கிருஷ்ண காந்தி வரும் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 18-ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக உள்பட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ண காந்தி வரும் செவ்வாய்கிழமை (ஜூலை 18-ஆம் தேதி) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பாஜக கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் அனந்த்குமார், நாளை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close