முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு காலையில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 6 பேர் வாடிக்கையாளர்கள்போல் பின் தொடர்ந்துவந்துள்ளனர். வங்கியை திறந்தபிறகு உள்ளே நுழைந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி சாவியை பறித்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல், பெரிய பெரிய பைகளில் நகைகளை எடுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நிதிநிறுவன ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், 5 பேர் கொண்ட தனிப்படைகள் கொள்ளையர்களை பிடிக்க பெங்களூருவுக்கு விரைந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com