நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை! வரலாற்று ஆய்வாளர் தகவல்

நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை! வரலாற்று ஆய்வாளர் தகவல்
நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை! வரலாற்று ஆய்வாளர் தகவல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஆவணம் வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டது. அந்த ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நேதாஜி மரணம் தொடர்பான ரகசிய ஆவணம் ஒன்றை வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே என்பவர் வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தில் தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் மோரே, தனது ஆவணத்தில் கூறியுள்ளார். இதனால் நேதாஜி மரணத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com