
வரும் 2021 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் ட்வீட் போட்டு உறுதி செய்துள்ளது.
35 வயதான ராபின் உத்தப்பா கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஆறாவது அணி. 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி உள்ள உத்தப்பா 4607 ரன்களை ஐபிஎல் ஆட்டத்தில் குவித்துள்ளார்.
“ராபின் உத்தப்பா நம் புது பேட்ஸ்மேனாக இணைந்துள்ளார். உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். மஞ்சள் வணக்கம்” என ட்வீட் போட்டு உத்தப்பாவை சென்னை அணியின் மஞ்சள் ஜெர்சியில் படமாக பகிர்ந்து அழகு பார்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சர்வதேச அளவில் இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் ராபின் உத்தப்பா விளையாடி உள்ளார்.