கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் சில வீரர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்ஜில் கான், முஹமது இர்பான், காலித் லத்தீப் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், முகமது ஷமி மற்றும் கம்ரான் அக்மால் ஆகியோரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டை சேர்ந்த ஜங் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த ஷமி, அக்மல் ஆகிய இருவருக்கும் சம்மன் எதுவும் இதுவரை அனுப்பவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2016 மார்ச்சில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் முகமது ஷமி, பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல், பாகிஸ்தான் அணியின் சமீபத்திய தொடர்களான வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றுக்கான அணி தேர்வில் உமர் அக்மலின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் பல்வேறு வெளிநாடுகளில் நடந்துவரும் கிரிக்கெட் லீக் தொடர்களில் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் பங்கேற்று விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் லீக் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!