மத்தியப் பிரதேசத்தில் 19 வயது கல்லூரி மாணவியை கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற கொடூரம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்துவரும் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது முன்னாள் காதலன், நந்திகிராமில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு அந்த மாணவியை முன்னாள் காதலனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதோடு விட்டுவிடாமல் அந்த மாணவியை கத்தியால் குத்தி, ஒரு சாக்கில் கட்டிப்போட்டு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மாணவியை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்துவந்து பலத்த காயமடைந்த மாணவியை சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் இச்சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, 13 வயது சிறுமி ஒருவர், 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவ்ராஜ் சிங் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 15 நாள் ‘சம்மன்’ பிரச்சாரத்தை நடத்தி வரும் நேரத்தில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
Loading More post
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!