[X] Close

5 ஆண்டில் 70 லட்சம் பேருக்கு வேலை: யோகி ஆதித்யநாத் அதிரடி

UP-Government-Has-Set-Target-To-Provide-70-Lakh-Jobs-In-5-Years--Yogi-Adityanath

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்தாண்டிற்குள் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மகத்தான வாய்ப்புகளை கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும், அடுத்த 5 ஆண்டிற்குள் மொத்தமாக 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் தொழில் சார் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி கல்வி மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பிற்காக வேளாண்மை, பால், சிறு தொழில் சார்ந்த துறைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

எந்த விஷயத்திற்கும் இயலாதவர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை எனக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், இளைஞர்களுக்கு நல்ல பயிற்சியையும், வழிகாட்டுதலையும் வழங்கி அவர்களை திறமையுள்ளவர்களாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close