Published : 16,Jul 2017 11:24 AM

ட்விட்டரில் வெடிகுண்டு மிரட்டல்... ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

Twitter-user-fined----2-crore-over-bomb-threat-against-Ryanair

ஐரோப்பியக் கண்டத்தின் முன்னணி விமான சேவை நிறுவனமான ரையான் ஏர் நிறுவனத்துக்கு ட்விட்டரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நெட்டிசனுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த பிரையன் லேக் என்பவர் ரையான் ஏர் விமான நிறுவனத்துக்கு, ட்விட்டர் மூலம் கடந்த 2016 பிப்ரவரியில் வெடுகுண்டு மிரட்டல் விடுத்தார். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நிபுணர்கள் மூலம் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்ட ரையான் ஏர் நிறுவனம், அவர் போலியாக மிரட்டல் விடுத்ததைக் கண்டறிந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ரையான் ஏர் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரையான் ஏர் விமான நிறுவனத்துக்கு பிரையன் லேக் ரூ.2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்