Published : 18,Jan 2021 05:34 PM

இது எங்க ஏரியா உள்ள வராத.. சஃபாரி வாகனத்தை கடித்து குதறிய புலி: வைரல் வீடியோ

Tiger-Bites-Safari-Vehicle-At-Bengaluru-Bannerghatta-Biological-Park

பெங்களூரு பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி வாகனம் ஒன்றை, புலி ஒன்று கடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பெங்களூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்கா. 104.27 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள் காணப்படுகின்றன. இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்க வசதியாக வனத்துறை சார்பில் சஃபாரி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

இந்நிலையில், சமீபத்தில் பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் வலம்வந்த சஃபாரி வாகனம் ஒன்றை, அங்கிருந்த புலி ஒன்று கடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒன்றரை நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், மிகவும் வலிமை வாய்ந்த அந்த புலி ஒன்று, சஃபாரி வாகனத்தின் பின்பக்கத்தை, தனது வாயில் கடித்து இழுக்கிறது. இதனால், பயணிகள் பயத்தில் உறைந்து போயினர். அப்போது மற்றொரு புலி ஒன்றும் அதன் அருகே வருகிறது. இந்த நிகழ்வுகளை மற்றொரு வாகனத்தில் இருந்த பயணிகள், வீடியோவாக பதிவு செய்தனர். புலி கடித்து இழுத்ததில், சஃபாரியின் பம்பர் பகுதி சேதம் அடைந்தது. அரிய காட்சியான இதனை பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்