டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: எச்சரித்த போலீஸ்

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: எச்சரித்த போலீஸ்
டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: எச்சரித்த போலீஸ்

டெல்லியில் பிரதமர் அலுவலம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது என்று எச்சரித்தனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com