Published : 16,Jan 2021 08:16 PM
நெகட்டிவ் விமர்சனங்களாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: ‘மாஸ்டர்’ பட இயக்குநர் கருத்து

"விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்கவேண்டும். நெகட்டிவ் விமர்சனங்களாக இருந்தாலும் ஏற்கவேண்டும்" என ‘மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.
படம் குறித்த விமர்சனங்கள் பற்றி கருத்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “ விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசிட்டிவ் விமர்சனங்கள் என்று இல்லை, நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்கவேண்டும். மாஸ்டர் படம் பிடித்திருப்பதால்தான் தியேட்டருக்கு மக்கள் கூட்டமாக வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.